Friday 30 December 2011

தமிழ்ப் பட இயக்குனர் கைது ?


செக் மோசடி வழக்கு ஒன்றில் கோர்ட்டில் ஆஜராகாததையடுத்து எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதிக்குள் இயக்குனர் சரனைக் கைது செய்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றில் ஆஜர்படுத்த நீதிபதி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில், வக்கீல் ஷேக் மெகருன்னிசா தாக்கல் செய்த மனு - ஜெமினி புரொடக்ஷன் உரிமையாளர் இயக்குனர் சரண், 2008ம் ஆண்டு வீட்டு கடன் தொடர்பாக சட்ட உதவி கேட்டு எங்களிடம் வந்தார்.

நாங்களும் சட்ட உதவி வழங்கினோம். அதற்கு ரூ.6 லட்சத்து 78 ஆயிரத்து 950 பீஸ் தரவேண்டும். இதற்காக 2 செக்குகள் தந்தார்.

அந்த செக்குகளை வங்கியில் டெபாசிட் செய்த போது பணமில்லாமல் திரும்பிவிட்டது. அவருக்கு பலமுறை தகவல் அனுப்பியும் பணம் தரவில்லை.

எனவே அவர் மீது செக் மோசடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு 7வது பெருநகர மாஜிஸ்திரேட் சாந்தினி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கில் சரண் ஆஜராகவில்லை. இதையடுத்து ஜனவரி 3ம் தேதிக்குள் சரணை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வளசரவாக்கம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இயக்குனர் சரண் கோர்டுக்கு வெளியே சமரசம் செய்து கொள்ள ஏற்பாடு செய்து விட்டாராம் . இதை முன்னாடியே செய்திருக்கலாமே வெண்ணை என்று நண்பர்கள் சிரித்து கொண்டே சொல்கிறார்களாம்.

0 comments:

Post a Comment