Monday 16 January 2012

புத்தக கண்காட்சியின் வீழ்ச்சி !


புத்தக கண்காட்சியின் வீழ்ச்சி !

இருபைதந்தாவது புத்தக கண்காட்சிக்கு உத்தேசமாக நாலரை லட்சம் பேர் வருகை தந்தனர். இது விற்பனையான டிக்கெட்டுகள் மட்டும் .இது தவிர பள்ளிகளுக்கு இலவசமாக கொடுத்தவை கணக்கில் இல்லை.

இந்த வருடம் அமைப்பினரின் தவறான கொள்கையினால் இன்று வரை சுமார் ஒரு லட்சத்து அறுபத்து ஏழாயிரம் பேர் வருகை புரிந்துள்ளனர்.பள்ளி இலவசங்கள் சேர்க்கப் படவில்லை.

ஒரே மாதிரியான சலிப்பூட்டும் புத்தகங்களை அறிமுகப் படுத்தும் தமிழ் பதிப்பாளர்கள். ஒருவர் மைக்ரோ அடுப்பு சமையல் புத்தகம் போட்டால் அத்தனை செட்டிகளும் அதே மாதிரி போடுவார்கள். உடன் பிள்ளைவாள் கவிதாவும் சேர்ந்து கொள்வார். அட்டை மட்டும் வேறு . உள்ளே எல்லாம் ஒரே சமாச்சாரம்தான்.உதாரணத்திற்கு எடுத்து கொண்டால் பொன்னியின் செல்வன் ஐந்து பாகத்தையும் எல்லா பதிப்பாளர்களும் புத்தகமாக போட்டு விட்டார்கள். போதத்திற்கு மகிழ்ச்சி கோமாளி குழுமம் வேறு மணியனின் படங்களோடு என்கிற வால் செய்தியோடு வெளியிட்டுள்ளது. பொன்னியின் செல்வனை இவர்கள் வாசகன் தலையில் பல வடிவங்களில் கட்டி காசு பார்க்கின்றனர்.

'பொன்னியின் செல்வனை' படிக்காவிட்டால் எந்தத் தமிழனும் செத்து விட மாட்டான்.


ஒரு பதிப்பாளர் வேடிக்கையாக சொன்னார். " பாரதியாரும் ,திருவள்ளுவரும் உயிரோடு எழுந்து வந்து ராயல்டி கேட்டால் இந்த மகானுபாவங்கள் பல கோடிகளை நியாப்படி தர வேண்டியிருக்கும். பல பதிப்பாளர்களும் ஓன்று சேர்ந்து பாரதியாரையும் , திருவள்ளுவரையும் ஆள் வைத்து காலி செய்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை .

' இவன் உன் ஜாதி .. அவன் என் ஜாதி' என்று எழுத்தாளர்களில் பாகு பாடு பார்க்கும் இவர்கள் நேர்மையாக எல்லா எழுத்தாளர்களையும் மதித்து புத்தங்கங்களை வாங்கிப் போட்டால் புதிய வருகைகள் இருக்கும்.வியாபாரமும் இருக்கும்.

0 comments:

Post a Comment