
புதிய துணை முதல்வர்
முதல்வர் குடும்பத்தால் ஒதுக்கி விடப்பட்ட மன்னார்குடி குடும்பத்தினர் கூட்டணியுடன் அடுத்த தேர்தலை சந்திக்க உள்ளாராம் தலைவர். மன்னார் குடி குடும்பத்திற்கு, தலைவர் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இடையே நல்ல கருத்து இல்லை என்றாலும் தலைவர் பிடிவாதமாய் இருக்கிறாராம். இழந்த தொகுதிகளை மீட்டு விடலாம் என்கிற எண்ணம் ஒரு புறம் இருந்தாலும் மன்னர் குடி குடும்ப்பத்தார் அடுத்த தேர்தலுக்கு பல நூறு கோடிகளை இறைக்க தயாராய் உள்ளதாகவும் அதற்க்கு அவர்கள் திரும்ப கேட்பது சிதம்பரத்தாருக்கு துணை முதல்வர் போஸ்டாம்.
தலைவர் அதற்கும் சம்மதித்து விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதற்கிடையே ஒட்டு மொத்த குடும்பத்தாருக்கும் ஆக்லாந்து குடியுரிமைக்கு முயற்சி செய்வதாகவும் கேள்வி.
மேலும் அடுத்த தேர்தலில் தனது முக்கிய மகளை துணை முதல்வர் ஆக்க வேண்டும் என்று துடிக்கிறாராம் தாய்க் குலம். தலைவர் ஆழ்ந்த யோசனையில் இருப்பதாக தகவல்.

0 comments:
Post a Comment