
ரஜினி மனைவி லதா 'ஆஸ்ரம்' என்ற பெயரில் பள்ளிகள் நடத்துகிறார். அவற்றின் ஆண்டுவிழா தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்தது. இதில் ரஜினி பெயரில் சிறந்த சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.
இயக்குனர் கே.பாலச்சந்தர், நடிகை ஆஷா பரேக், மறைந்த நடிகை ஷம்மிகபூர் ஆகியோருக்கு இவ்விருதுகளை லதா ரஜினிகாந்த் வழங்கினார். ஷம்மிகபூர் சார்பில் அவரது மகன் ஆதித்யா பெற்றுக் கொண்டார். வி.எஸ்.ராகவனுக்கு செவாலியே சிவாஜி விருதும், பாடகர் ஏ.எல்.ராகவன், நடிகை எம்.என். ராஜம், டேபிள் டென்னிஸ் வீரர் சந்திரசேகர் உள்ளிட்ட பலருக்கு பீஷ்மர் விருதுகளும் வழங்கப்பட்டன.
விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்று பேசியதாவது:-
கே.பாலச்சந்தர், ஷம்மி கபூர், ஆஷா போன்றோருக்கு விருது கொடுத்துள்ளது சந்தோசமாக இருக்கிறது. ஆனால் எனது பெயரில் என் குருநாதர் பாலச்சந்தருக்கு விருது கொடுத்தது தர்மசங்கடமாக இருந்தது. என் பெயரில் விருது வழங்கும் அளவுக்கு நான் பெரிதாக சாதித்து விடவில்லை.
எனவே எனது பெயரில் விருது வழங்கவேண்டாம் என்று சொன்னேன். ஆஸ்ரம் சார்பில்தானே வழங்குகிறோம் என்று பதில் அளித்தார்கள். அடுத்த ஆண்டில் இருந்து இவ்விருதுகள் பாலச்சந்தர் பெயரில் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு ரஜினி பேசினார். கே.பாலச்சந்தர் பேசும்போது, 'ரஜினியின் குரு பக்தி ஒப்பிட முடியாதது. இந்தியாவில் தோன்றிய மிகப்பெரிய நிகழ்வு ரஜினி' என்றார்.
என்ன ஒரு தன்னடக்கம் ? அவர் பெயரில் தருவதற்கு உங்கள் பெயரில் தந்து விடலாம். அடுத்த வருடம் அவர் விருது வழங்கும் போது " அவன் பள்ளி .. அவன் பெயரிலே தந்தால் தான் சிறப்பாக இருக்கும் " என்று ஜால்ரா தட்டவா?

0 comments:
Post a Comment