Saturday 14 January 2012

சென்னை புத்தகக் கண்காட்சி ( சென்னை புத்தக காட்சி ? )




சென்னை புத்தகக் கண்காட்சி செயலாளர் மற்றும் பொருளாளர் தலைவர் அனைவரும் மு. க , ஆசாமிகள். உள்ளாட்சி துறை , கரும் பலகை திட்டம் என கூட்டு கொள்ளை அடித்து கோடிகணக்கான ரூபாயை பதுக்கி வைத்துள்ளனராம். இதில் இவர்கள் இந்த அமைப்புக்குள் புதியவர்கள் யாரும் நுழைந்து விடாமல் இருக்க அனைத்து வித தில்லா லங்கடி வேலைகளையும் செய்துள்ளனர்.

இந்த வருடம் தன்னை எழுத்தாளர்களின் நண்பர் என்று சொல்லிக் கொள்ளும் மு. க . வை அழைக்க முடியாமல் அசட்டு ஆங்காரம் கொண்டு முதல்வரை பார்க்காமல் அதற்கு முயற்சியும் செய்யாமல் தான் தோன்றித் தனமாக கண்காட்சியை ஒரு திட்ட வரைவு இல்லாமல் நடத்தி வருகின்றனர். இவர்களின் விளம்பர பாணி அபத்தம் . தினத்தந்தி மற்றும் பிரபல இதழ்களில் எந்த தூண்டு விளம்பரம், துளிச் செய்தி இல்லாமால் கண்காட்சி ஈ அடிக்கிறது.

இவர்களிடம் ஒரு பதிப்பாளர் விழா ஆரம்பிக்க அம்மாவை எப்படியாவது அழைத்து வரலாம் என செண்பக பதிப்பாளர் " அந்த அம்மா எவ்வளவு புத்தகம் எழுதியிருக்கு " என்று கிண்டலாக கேட்டாராம். நுணலும் தன் வாயால் கெடும்.'தான் ஒரு கம்யூனிஸ்ட்' என்று சொல்லித் திரியும் இவர் வாழ்வியல் முறை பெரும்தனக்காரன் முறை. இந்த அழகில் தானும் ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்ளும் இவர் ஒரு போலி கம்யூனிஸ்ட் தான்?

"புத்தகக் கண்காட்சி எப்படி வெற்றிகரமாக எப்படி நடத்த வேண்டும் என்பதை இவர்கள் ஈரோடு குணசேகரனிடம் கேட்டு பாடம் படித்தால் நல்லது.தெரியாததை தேர்ந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வதில் தப்பு ஒன்றும் கிடையாது. அதில் ஒன்றும் கௌரவம் குறைந்து போய் விடாது"என்கிறார் சாண்டில்யன் டைட்டில்களை வகை தொகை தெரியாமல் அடித்து காசு பார்க்கும் பதிப்பாளர்.

வருடா வருடம் இவர்களுக்கு வேண்டியவர்களை அழைத்து பேச வைத்து ( இதில் சுகி சிவம் அடக்கம் ) அவர்களுக்கு காசு அழுகின்றனர்.இவர்களின் செய்கையால் சில நல்ல நேர்மையான பதிப்பாளர்கள் மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தவிக்கின்றனர்.வருடா வருடம் கையை சுட்டு கொள்வது சிறு பதிப்பாளர்கள் தான்.

பிரபல கவித(மான) பதிப்பாளர் ஆரம்ப காலத்தில் தள்ளு ஊந்தியில் புத்தகம் விற்றவர். இப்போது கிடங்குக்கு மட்டும் ரூபாய் ஐம்பதாயிரம் தருகிறாராம். ஆனால் எழுத்தாளர்கள் ராயல்டி கேட்டால் பஞ்ச பாட்டு படும் இவர் மகள் மனைவி மருமகன் என பல பெயர்களில் பதிப்பகம் நடத்தி வருகிறார்.

இந்த அழகில் பாதி பதிப்பாளர்களுக்கு தமிழ் ஒரு வரி எழுத வராது. இவர்களினால் பிழைப்பவர்கள் பெரிய முதலாளிகளான நக்கீரன் , விகடன், கவிதா , வானதி போன்ற பதிப்பாளர்கள். இவர்கள் பெரும்பாலும் கருப்பை வெளுப்பாக்க புத்தகம் போடுபவர்கள்தான். மற்ற படி சமூக சிந்தனையோ நல்ல எண்ணமோ கிடையாது. எழுத்தாளர்களின் உழைப்பை சுரண்டி பிழைப்பை நடத்தும் இது போன்ற ஆசாமிகளை புகழ்ந்து தள்ள சுகி சிவம் ( சவம் ) போன்ற ஆசாமிகள் துணை போகின்றனர்.

"அலையன்ஸ் ஸ்ரீனிவாசன் பொறுப்பில் இருந்தபோது விளம்பரம் , வருவோர் கூட்டம் , வியாபாரம் எல்லாம் மிகவும் நன்றாக இருந்தது ... அவர் கொஞ்சம் முசுடு ஆனால் நல்ல நிர்வாகி .. அவர் பெல்ட் என்பதால் அவரை ஒதுக்கி வைத்துள்ளனர் இந்த முட்டாள்கள் " என்று சொல்கிறார் சுஜாதா புத்தகத்தை கணக்கு இல்லாமல் போட்டு காசு உண்டாக்கிகொண்டிருக்கும் பதிப்பாளர் ஒருவர்.ஹிக்கின் பாதம்ஸ் சந்திரசேகரும் இதே கருத்தை கொண்டுள்ளார் என்று சொல்கிறார் அதே பதிப்பாளர்.

ஊரோடு ஒத்து வாழ தெரியாத தாங்கள் எழுத்தாளர் என்று நம்பும் தலைவரை கழட்டி விடா விட்டால் நிறைய பதிப்பாளர்கள் தற்கொலை செய்து கொண்டாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

சிறு பதிப்பாளர்களின் காசையும் ஆர்டரையும் மறித்து தங்களுக்கும் பிரித்து கொள்ளும் இந்த செட்டி முதலைகளிடம் இருந்து பதிப்பகங்களை அம்மா தான் காட்பாற்ற வேண்டும்

0 comments:

Post a Comment